මදුරාපුර

විකිපීඩියා වෙතින්
Jump to navigation Jump to search
மதுராபுரி
CountrySri Lanka
மாகாணம்தென் மாகாணம்
වේලා කලාපSri Lanka Standard Time Zone (UTC+5:30)
 • ගිම්හානය (DST)Summer time (UTC+5:30)

මදුරාපුර නොහොත් මදුරාගොඩ ශ්‍රී ලංකාවේ දකුණු පළාතේ ඉතිහාසයක් අැති, සුපිරසිද්ධ වැලිගම නගරයේ පිහිටා අැති ගමකි. මෙම ගම පොල්අතු නදියෙන් වට කර අැත. වැලිගම - අකුරැස්ස ප්‍රධාන මාර්ගය මෙම ගම හරහා යයි.

தாவரங்கள்[සංස්කරණය]

இங்கும், இதனையண்டிய பகுதிகளிலும் இலங்கைக்கே உரித்தான பல்வேறு விதமான தாவர விலங்கினங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதர பகுதிகளிற் காண்பதற்கரிதான கின்னை மரங்களும், கிங் மரங்களும், “தயிர்த் தென்னை” மரங்களும் இங்கு நிறைந்துள்ளன.

விலங்குகள்[සංස්කරණය]

நீர் நாய்களும், முதலைகளும், பலவித நண்டுகளும், இறால் வகைகளும், ஆற்றுச் சிப்பிகளும் இங்கு காணக் கிடைக்கின்றன. கோடை காலங்களில் அரபிக் கடல் பகுதியிலிருந்து சுறா மீன்கள் பொல்வத்து ஓயாவினுள் ஊடுருவுவதுண்டு.

புவியியல்[සංස්කරණය]

காலநிலை[සංස්කරණය]

இலங்கையின் ஈர வலயத்தில் அமைந்துள்ளதால் வருடம் முழுவதும் மழை வீழ்ச்சியைப் பெறக்கூடிய இப்பகுதி மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது.

மண்[සංස්කරණය]

மேற்புற மண் முழுவதும் வண்டல் மண்ணாகக் காணப்படும் இக்கிராமத்தில் எங்கு தோண்டினாலும் பல்வேறு விதமான கடல்வாழ் உயிரினங்களினதும் பாறைப் படிவுகளே நிறைந்து காணப்படுகின்றன. இதனால், இப்பகுதியானது ஆதியில் கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதலாம். இங்கு பெறப்படும் நிலத்தடி நீரும் ஓரளவு உவர்ப்புத் தன்மையுள்ளதாகும்.

வெலிப்பிட்டிய பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்த சுமார் 4000 பேர் வசிக்கும் இக்கிராமமானது இரண்டு கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இதன் மதுராகொட பிரிவில் ஒரு ஜும்ஆப் பள்ளிவாசல் உட்பட இரண்டு பள்ளிவாசல்களும், சிங்கள பௌத்தர்கள் அதிகமாக வாழும் தெனிப்பிட்டிய-மேற்கு பிரிவில் இரண்டு பௌத்த விகாரைகளும் ஒரு சிங்களப் பாடசாலையும் காணப்படுகின்றன.

இங்கு பேச்சு வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்கள் இதனை அண்டிய பகுதிகளிலுள்ள பேச்சு வழக்கிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. அவ்வாறே புழக்கடை, தன்னினைவு, குறுணி, பாகம் (தூரம்), பரிகாரி போன்ற சொற்கள் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படாவிடினும் இங்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

right|thumb|வெலிகாமம் -மதுராப்புர கிராமத்தின் எல்லைப்படம்கு

இங்கு அமைந்துள்ள, கல்வி வளர்ச்சியில் துரித வளர்ச்சி கண்டுவருவது அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையாகும். மேலும், சில தனியார் நிறுவனங்களும் இங்கு இலவச கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் ஒரு அஹதிய்யாப் பாடசாலையும் இங்கு இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது.

இலங்கை முஸ்லிம் ஆசிரிய முன்னோடி, தமிழிற்சூரியன் த.சா. அப்துல் லதீப் இவ்வூரைச் சேர்ந்தவர்.

உசாத்துணைகள்[සංස්කරණය]

  • எம். எம். எம். மகரூப் (1995). "மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்". இலங்கை அரசாங்க அச்சகம். Retrieved 12 நவம்பர் 2016. Check date values in: |accessdate= (help)
  • http://noolaham.net/project/18/1740/1740.pdf title=இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு | மதுராப்புர எழுத்தாளர் முஹம்மது பைரூஸ் பற்றிய விபரம்
  • https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D மதுராப்புர அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலை

பகுப்பு:மாத்தறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்

"https://si.wikipedia.org/w/index.php?title=මදුරාපුර&oldid=391860" වෙතින් සම්ප්‍රවේශනය කෙරිණි